தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 24, 2022

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவு

கள்ளக்குறிச்சியில் சமீபத்தில்  மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.


இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 இந்நிலையில்,தமிழக அரசின் பள்ளிகல்விதுறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும்  புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


அதன்படி,


1. பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.


 2. சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது.


 3. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.


4.  மரத்தடியில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது.


 5.சத்துணவு தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.


 6.  பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உரிய அறிவுரைகள் மாணவர்களுக்கு"வழங்கப்பட வேண்டும்.


 7.  பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வந்துவிட வேண்டும்.


8.   ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. 


9.  மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைக்காக பள்ளியை விட்டு வெளியே அனுப்பக் கூடாது. 


10.  ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-இல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்


மேலும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டுமெனவும் இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. மரத்தடியில் வகுப்பு பல அரசு பள்ளிகளில்......

    ReplyDelete
  2. 2014 ல இருந்து பதவி உயர்வு மட்டுமே வழங்கி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வேலையை கடந்த ஆட்சியில் செய்து இதுவரை படித்த இளைஞர்கள் வேலை கிடைக்கும் நிலையை கெடுத்து விட்டார்கள். இந்த ஆட்சியிலும் அதே நிலை தொடர்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது 1864 பணியிடங்களை மட்டுமே நிரப்புகிறார்களாம் அதுவும் மறு நியமனத் தேர்வு வைத்து. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? 10 ஆண்டு நியமனம் வழங்காமல் தற்போது தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை எழுத சொல்வது? இதேபோல் பணியில் இருப்பவர்கள் 60 வயது வரை நீட்டிப்பு ஒருபுறம். படித்தவர்கள் எங்கே சென்று பிச்சை எடுப்பது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி