பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்கள் எது? புள்ளிவிவரங்கள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2022

பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்கள் எது? புள்ளிவிவரங்கள் வெளியீடு.

2018-19 மற்றும் 2019-20-ன் மாவட்டங்களுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டை (Performance Grading Index for Districts - PGI-D)மத்திய அரசு வெளியிட்டது.

2019-20ம் கல்வியாண்டின் மாவட்டங்களுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டில் தமிழகத்தில் கன்னியாகுமரி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று  இடங்களைப் பிடித்துள்ளன.

முன்னதாக, 2018-19 மற்றும் 2019-20-ன் மாவட்டங்களுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டை (Performance Grading Index for Districts - PGI-D) மத்திய அரசு வெளியிட்டது.கற்றல் மதிப்பீடுகள் (Outcome), வகுப்பறை அனுபவம் (Effective Classroom transaction), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் ( Infrastructure, Facilities, Student Entitlements), பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு (School Safety and Child Protection), இணைய வழி கற்றல் (DIgital Learning), ஆளுகை செயல்முறை (Governance) உள்ளிட்டவைகளில்  ஏற்பட்டு வரும் மாற்றங்களை 83 பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், ஒட்டுமொத்த மதிப்பெண் அல்லது அந்தந்த பிரிவுகளில்  அதிகபட்சமாக 90% புள்ளிகளை பெறும் மாவட்டங்கள்  'Daksh' என்ற உயரிய மதிப்பீட்டதாகவும், குறைந்தபட்சமாக 10% புள்ளிகள் வரை பெறும் மாவட்டங்கள் Akanshi-3 என்ற குறைய மதிப்பீட்டைக் கொண்டதாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.


2018-19-ல், தமிழத்தைப் பொறுத்த வரையில், அதிகபட்சமாக தருமபுரி, விழுப்புரம் ஆகிய இரண்டு  மாவட்டங்கள் 71-80% மதிப்பீட்டிலும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி, அரியலூர், திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் 51-60% மதிப்பீட்டிலும், இதர அனைத்து மாவட்டங்களும்  61-70% என்ற   மதிப்பீட்டிலும் இடம் பெற்றன.

இந்த மாவட்டங்களின் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அளவிடும் விதமாக 2019-20ன் தரப்படுத்தல் குறியீட்டும்  வெளியிடப்பட்டுள்ளது.


தரப்படுத்தப்பட்ட இரு ஆண்டுகளில், 2019-20ல் சில மாவட்டங்கள் தங்களது தர நிலையில் பின்னடைவை சந்தித்தது தெரிய வந்துள்ளது.உதாரணமாக,  71-80% என்ற மதிப்பீட்டில் ஒரு மாவட்டம் கூட இடம்பெறவில்லை. 2018-ல் அந்த மதிப்பீட்டில் இருந்த தருமபுரி, விழுப்புரம் தரநிலையில் பின்னோக்கி 61-70% மதிப்பீட்டில் இதன் பெற்றுள்ளன. அதேபோன்று, 51-60% மதிப்பீட்டில் இருந்து அரியலூர் 2019-20ல் 41-50% வரம்புக்குள் வந்துள்ளது.

இரண்டு கல்வியாண்டுகளிலும்,  ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பெண்ணில்  எந்தவொரு மாவட்டமும்  80 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி