NMMS Registration - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு National Scholarship Portal இணையளத்தில் விண்ணப்பித்தலுக்கான வழிகாட்டுதல் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2022

NMMS Registration - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு National Scholarship Portal இணையளத்தில் விண்ணப்பித்தலுக்கான வழிகாட்டுதல் :

பள்ளியில் பயிலும் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்களை கண்டறிதல் ( 9th Studying NMMS passed student identification ) : 

கடந்த ஆண்டு ( 2021-22 ) 8 ம் வகுப்பில் NMMSS தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் , தற்போது பல்வேறு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9 ம் வகுப்பு பயின்று வருகின்றனர் . இதில் முதல் பணியாக தற்போது பள்ளியில் 9 ம் வகுப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களில் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்களை கண்டறிதல் வேண்டும்.

 இவ்விவரத்தினை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கவனமுடன் ஆராய்ந்து , 8 ம் வகுப்பில் NMMSS தேர்வெழுதிய தங்கள் பள்ளி மாணவர்களுக்கும் , 8 ம் வகுப்பில் வேறு பள்ளியில் பயின்று , தற்போது 9 ம் வகுப்பில் தங்கள் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களில் , NMMSS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எவரும் உள்ளனரா என்பதையும் நன்கு ஆராய்து பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் . கடந்த ஆண்டுகளில் பல பள்ளிகளில் NMMSS தேர்ச்சி பெற்று , புதியதாக 9 ம் வகுப்பு சேர்ந்த சில மாணவர்களுக்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காததால் , அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க பெறாமல் புகார்கள் பெறப்பட்டுள்ளது. எனவே இப்பணியில் கவனமுடன் செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMMS EXAM PASSED INSTRUCTION & REGISTRATION - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி