ஆசிரியர் தேர்வு வாரியம் , சென்னை .06 பத்திரிக்கை செய்தி 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணித்தெரிவு செய்வது சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை ( அறிவிக்கை எண் .14 / 2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு , கணினி வழித் தேர்வுகள் ( CBT ) 08 : 122021 முதல் 13 : 12 : 2021 வரை நடத்தப்பட்டு , தேர்வு முடிவுகள் 08.032022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
11.03.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் , பணிநாடுநர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் தொடர்பான கூடுதல் சான்றிதழ்களை / ஆவணங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 11.03.2022 முதல் 0104,2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் பணிநாடுநர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு , அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 பாடப்பிரிவுகளுக்கு 1 : 2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது . அதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது . தற்பொழுது , முதற்கட்டமாக Textile Technology , Production Engineering , Printing Technology , Physics , Chemistry , English மற்றும் Mathematics ஆகிய பாடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு 16.07.2022 தேதியில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . மற்ற பாடங்களுக்கு 17.07,2022 மற்றும் 18.07.2022 தேதிகளில் நடத்தப்படும் , பாடங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படும்.
பணிநாடுநர்களுக்கான அழைப்புக் கடிதம் மற்றும் ஆளறிச் சான்றிதழ் படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . பணிநாடுநர்கள் தங்களது அழைப்புக் கடிதம் மற்றும் ஆளறிச் சான்றிதழ் படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து 14,07.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் பணிநாடுநர்களுக்கு தகவல் அளிக்கப்படும் . அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிநாடுநர்கள் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் பத்திரிக்கைச் செய்தியினை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
MPC TRB coaching center Erode
ReplyDeleteUG TRB (MATHS) Recruitment exam
# Regular class starts from July 28
# Online class + live recorded videos for
further reference
# Slip tests + Unit wise tests
# 20%, 30% and 50% tests
# For details 9042071667