ஒவ்வொரு நிமிடமும் 1,100 போன்கள் விற்பனை! விழாக்கால சலுகை.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2022

ஒவ்வொரு நிமிடமும் 1,100 போன்கள் விற்பனை! விழாக்கால சலுகை..

 

விழாக்கால ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒவ்வொரு நிமிடமும் 1,100 மொபைல்போன்கள் விற்கப்பட்டதாக ஓர் அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. 


அமேசான், பிளிப்கார்ட், வால்மார்ட், மீஷோ, மிந்த்ரா உள்ளிட்ட ஆன்லைன் வணிக விற்பனை தளங்கள் கடந்த ஒரு வாரம் விழாக்கால சலுகைகளை அறிவித்திருந்தன. 


இந்நிலையில், கடந்த சில நாள்களில் ஆன்லைன் வணிகத் தளங்களில் 60-70 லட்சம் மொபைல்போன்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ரெட்சீர்(Redseer) நிறுவன அறிக்கையின்படி, ஒவ்வொரு நிமிடமும் கிட்டத்தட்ட 1,100 மொபைல்போன்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் கடந்த நான்கு நாள்களில்(செப்டம்பர் 22-25 )மட்டும் பெரிய வணிகத் தளங்களில் ரூ.11,000 கோடி மதிப்புள்ள மொபைல்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக, ஐபோன் 12, 13, ஒன்பிளஸ் போன்ற பிரீமியம் போன்கள் இந்த நான்கு நாட்களுக்கு மட்டும் பொருள்களை விற்பனைக்கு வைத்துள்ளன. 


அதுபோல கடந்த வாரத்தில் முதல் நான்கு நாட்களில் ரூ.5,500 கோடி மதிப்பிலான ஆடைகள், பாதணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனையாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


அமேசான் ஃபேஷனுக்கான 60% விற்பனை, இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு நகரங்களில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும், வாடிக்கையாளர்கள் சாம்சங், ஒன்பிளஸ், எம்ஐ, எல்ஜி மற்றும் சோனி போன்ற தொலைக்காட்சி தயாரிப்புகளை விரும்புவதாக குறிப்பிட்ட வணிகத் தளம் கூறியுள்ளது. 


மீஷோ நிறுவனமும் அதன் விற்பனையின் முதல் நாளில் 85% ஆர்டர்களை 2, 3 மற்றும் 4 ஆவது அடுக்கு நகரங்களில் இருந்து பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


செப்டம்பர் 22-25 வரையில் மட்டும், ஆன்லைன் வணிகத் தளங்கள் ரூ. 24,500 கோடி விற்பனையை எட்டியுள்ளன.


வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 5.5 கோடி பேர்.  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபேஷன் பிரிவில் அதிக விற்பனை நடந்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி