ஸ்மார்ட்போன் திருட்டு: புதிய விதியைக் கொண்டு வந்த மத்திய அரசு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2022

ஸ்மார்ட்போன் திருட்டு: புதிய விதியைக் கொண்டு வந்த மத்திய அரசு!

 இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் திருட்டுகளையும் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்கும்பொருட்டு மத்திய அரசு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. 


அதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வைக்கப்படுவதற்கு முன்பு அதன் ஐ.எம்.இ.ஐ.(IMEI) என்ற தனித்துவமான எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. 


மத்திய அரசின் இந்திய போலி சாதனக் கட்டுப்பாட்டு அமைப்பின்(ICDR) அதிகாரபூர்வ இணையதளமான https://icdr.ceir.gov.in ல் மொபைல் உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரிக்கும் மற்றும் இறக்குமதி செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. வருகிற 2023, ஜனவரி 1 முதல் இது அமலுக்கு வருகிறது. 


இதன்மூலமாக டிஜிட்டல் மூலமாக ஸ்மார்ட்போன்களின் ஐஎம்இஐ எண்ணை நிர்வகிக்க முடியும் என்றும் போலி ஸ்மார்ட்போன்கள் விற்பனையையும் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்கவும் அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை கூறியுள்ளது. 


மேலும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம் என்றும் இதற்கென எந்த முகவரையும் நீங்கள் அணுகத் தேவையில்லை என்றும் அவ்வாறு பதிவு செய்யாத ஸ்மார்ட்போன்கள் சந்தையில் விற்பனை செய்யபட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 


ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கென தனித்துவமான ஐஎம்இஐ (IMEI) எண் உள்ளது. உங்கள் போனின் ஐஎம்இஐ எண்ணைப் பெற *#06# ஐ டயல் செய்யுங்கள். ஒரு போனில் இரண்டு சிம் உபயோகித்தால் இரண்டு ஐஎம்இஐ எண்கள் இருக்கும். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி