தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து கட்டணயுயர்வு அமல் படுத்தப்படுகிறது.
மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அது தொடர்பான கருத்து கெட்டப்பு கூட்டமானது நடைபெற்று கொண்டிருந்தது. தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மேலும் ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
8 ஆண்டுகளுக்கு பின்னர் மின்கட்டண உயர்வானது அமல்படுத்தப்படுகிறது. 200 யூனிட்டுக்கு மேல் இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்தப்படுவதாகவும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்படுவதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு 400 யூனிட் வரை உபயோகபடுத்தும் 18.82 லட்சம் பயனாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கருத்து கேட்பு கூட்டம் ஆனது நடைபெறுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த சூழல் தான் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்ட நிலையில் மின்கட்டண உயர்வு ஆனது அமல்படுத்தப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி