எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மாற்றம் - SCERT இயக்குநர் அவர்களின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மாற்றம் - SCERT இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12ந்தேதி நடைபெறும்- SCERT இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.


பார்வை -1 ல் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து மாவட்ட அளவிலான தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சியைத் தொடர்ந்து ஒன்றிய அளவிலான பயிற்சியை 06 : 10.2022 முதல் 08 : 10.2022 முடிய நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது , பார்வை -2 ல் காண் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி நிருவாகம் காரணங்களுக்காக ஒன்றிய அளவிலான பயிற்சியின் நாட்கள் 10.10.2022 முதல் 12.10.2022 முடிய நடத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே , மாற்றம் செய்யப்பட்டுள்ள நாட்களில் பயிற்சியினை தொய்வின்றி நடத்திட அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி