7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்: - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 18, 2022

7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்:

 


7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு முதல் பத்து இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளின் பட்டியல் பின்வருமாறு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தேவதர்ஷினி 518 மதிப்பெண் பெற்று முதல் இடமும், சென்னை குரோம்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவன் சுந்தர்ராஜன் 503 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், வேலூர் மாவட்டம் அரசு உயர்நிலை பள்ளி மாணவன் பிரவீன் குமார் 418 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் எஸ்.ஆர்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிருந்தா 467 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும், ஈரோடு மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் 466 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடமும், திருவள்ளூர் மாவட்டம் ஏ.எம்.கே அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி மாணவி சத்யா தேவி 463 மதிப்பெண் பெற்று ஆறாம் இடமும், சேலம் மாவட்டம் நகராட்சி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவன் ராஜ்குமார், மதிப்பெண் பெற்று ஏழாம் இடமும் பெற்றுள்ளனர். சேலம் மாவட்டம் மாடல் பள்ளி மாணவன் சிவக்குமார் 446 மதிப்பெண் பெற்று எட்டாம் இடமும், சேலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா 444 மதிப்பெண் பெற்று ஒன்பதாம் இடமும், திருவண்ணாமலை மாவட்டம் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவன் பிரகாசம் 439 மதிப்பெண் பெற்று பத்தாம் இடமும் பிடித்துள்ளனர்.


அதிக மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள்: 2022- 23ம் கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான அரசு ஒதுக்கீட்டிற்கு முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் தரவரிசை பட்டியல் பின்வருமாறு: மதுரை மாவட்டம் மகாத்மா குளோபஸ் கேட்வே பள்ளி மாணவன் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று முதலிடமும், கோயம்புத்தூர் சுகுணா பி.ஜி.பி பள்ளி மாணவி ஹரிணி 702 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சென்னை ஆல்பா பள்ளி சி.பி.எ.ஸ்சி மாணவர் சொக்கலிங்கம் 700 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் சஞ்சய் க்ரிஷ் 700 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும், ஈரோடு மாவட்டம் சுகுணா பி.ஜி.பி பள்ளி மாணவன் சுதர்சன் 700 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடமும் பிடித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி சுவேதா 696 மதிப்பெண் பெற்று ஆறாம் இடமும், சென்னை பி.எஸ்.பி.பி சீனியர் செகண்டரி பள்ளி மாணவி ஹரிணி 695 மதிப்பெண் பெற்று ஏழாம் இடமும், ஈரோடு மாவட்டம் நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளி மாணவன் பரத் 695 மதிப்பெண் பெற்று எட்டாம் இடமும் பிடித்துள்ளார். சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவன் ரினித் ரவிச்சந்திரன் 695 மதிப்பெண் பெற்று ஒன்பதாம் இடமும், சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளியை சேர்ந்த மாணவன் ஸ்டீவ் 695 மதிப்பெண் பெற்று பத்தாம் இடமும் பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி