அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்'திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்'திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

 


திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நவம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.


நடமாடும் ஆய்வக வாகனங்கள் தொடக்கம்:

திருச்சியில் நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 150 இருசக்கர மோட்டார் வாகனம், நடமாடும் அறிவியல் ஆய்வகம் முதற்கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நடமாடும் ஆய்வக தன்னார்வலர்கள் 20 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வழங்கப்பட்டுள்ளனர்.

வானவில் மன்றம் திட்டம் தொடக்கம்:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் வானவில் மன்றம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். வானவில் மன்றம் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 13,200 அரசு பள்ளிகளில் பயிலும் 20,000 மாணவர்கள், வானவில் மன்றம் திட்டத்தால் பயனடைவார்கள். அறிவியல் உபகரணங்கள் வாங்க பள்ளிகளுக்கு தலா ரூ.1,200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

வானவில் மன்ற வகுப்பை முதல்வர் பார்வையிட்டார்:

திருச்சி காட்டூர் அரசு பள்ளியில் நடந்த வானவில் மன்ற வகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அரசுப்பள்ளியில் வகுப்பறைக்கு சென்று மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி