காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 22, 2022

காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை வழியே கன்னியாகுமரியை நோக்கி நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது. டிச.25-ல் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தென் மேற்கு வங்ககடல் மற்றும் தன்னை ஒட்டி இருக்க கூடிய இலங்கை கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அலுவடையும் என இந்திய வானிலை அதைஉமையம் கூறியுள்ளது. இந்த காரணமாக டிச.25-ல் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு தென்மேற்கு திசையில் இலங்கை கடல் பகுதியை நோக்கி நகர கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் டிச. 25-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையமும் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி