ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2022

ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

 

நமது கல்விச்செய்தியில் இது குறித்த செய்தி காலையில் வெளியிடப்பட்ட நிலையில் கல்வித்துறை நடவடிக்கை! !!

ஆறாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ரம்மி குறித்த பாடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரம்மி பாடப்பகுதியை நீக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


ரம்மி விளையாட்டுக்களால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதன் காரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து தமிழக அரசு சட்டமன்றத்தில் அவசர சட்டம் இயற்றியது. இன்னும் அதற்கு ஆளுநர் அனுமதி தராத நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள கணித பாட புத்தகத்தில் ரம்மி எப்படி விளையாடுவது என்பதை கற்று தரும் வகையில் படங்கள் இடம் பெற்றுள்ளது.  

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்றி கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை பாடபுத்தகத்தில் ரம்மி குறித்த பாடம் இருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்: 

ஏற்கனவே இந்த பாடப்பகுதி இருந்துள்ளது. தற்போது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதால் காரணமாக இதனை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அடுத்த கல்வியாண்டில் இந்த பாடப்பகுதி இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி