ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்களுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நன்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2023

ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்களுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நன்றி

ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்களுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று ( 4.3.2023 ) தலைமைச் செயலகத்தில் , தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் , தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி , தமிழகத் தமிழாசிரியர் கழகம் , தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றங்கள் , ஜே.எஸ்.ஆர் . தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி , தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் , தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர் நலக் கூட்டமைப்பு , டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் , இடைநிலை பதிவு மூப்பு இயக்கம் , நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் , தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம் , தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் , தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் , தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து , அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் , அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை , உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு 50,000 ரூபாய் வரை உயர்வு , அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா போன்ற திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர.. உடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உள்ளார்.

Thanks to CM.pdf - Download here

10 comments:

 1. ஆசிரியர் சங்கங்கள் தேவை இல்லை.

  ReplyDelete
 2. சொம்பு தூக்கி

  ReplyDelete
 3. முட்டு கொடுக்கும் சங்கங்கள்

  ReplyDelete
 4. நன்றி கெட்ட அரசு கேடு கெட்ட சங்கங்கள்

  ReplyDelete
 5. இப்படி மானங்கெட்ட சங்கங்கள் இருக்கும் வரை எந்த உரிமையும் பெற முடியாது. நாசமா போவங்கிடா சங்க சங்கிகளா

  ReplyDelete
 6. மானங்கெட்ட சங்கங்கள்
  உங்களது சம்பளத்தில் வாங்கி கொள்ள, பரிசோதனை செய்து கொள்ள வக்கு அற்ற சமூகம் ஆக ஆசிரியர்கள் சமூகம் என்று இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்

  ReplyDelete
 7. வாயில நல்லா வருது

  ReplyDelete
 8. ஜால்ரா சங்கங்கள் .

  ReplyDelete
 9. யானப்பசிக்கு நல்ல போடறீங்க தீனி..

  ReplyDelete
 10. Ennatha senchan? Nandri solla? loose payalkala.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி