School Morning Prayer Activities - 03.03.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2023

School Morning Prayer Activities - 03.03.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 03.03.2023

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல்

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் எண்: 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

பொருள்:
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும். 


பழமொழி :
Little strokes fell great oaks.

சிற்றுளியால் மலையும் தகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.

பொன்மொழி :

பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்ந்தே படிக்கிறார்கள்.


பொது அறிவு :1

. உடலில் ஓடு உள்ள ஒரே பாலூட்டி உயிரினம் எது ?

 ஆமை .

 2.கங்காரு அதிகமாக காணப்படும் நாடு எது?

 ஆஸ்திரேலியா.


English words & meanings :

domain - an area owned or controlled by a ruler. noun. Some animals have their own domain in the forests. அதிகார அல்லது ஆதிக்க வரம்பு. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

ஒமேகா 3 நிறைந்த கொழுப்பு மீன்கள், வெண்ணெய், நட்ஸ் வகைகள், பெர்ரி பழங்கள், அதிக அளவில் பச்சை காய்கறிகள், கீரைகள், அவித்த முட்டை போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி சரியான உடற்பயிற்சியைப் பின்பற்றுவதோடு, மனதையும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருந்தால் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.


  மார்ச் 03 இன்று

உலகக் காட்டுயிர் நாள்உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1]
இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.


நீதிக்கதை

வித்தைக்காரனை வென்ற கதை

தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப்பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டார். எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரில் தங்கினார். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தார். ஒரு நாள் வேடிக்கை செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனை சந்தித்தார். 

அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டார். அவனிடம் ஒரு வித்தைக்காரனாக சேர்ந்து கொண்டார். அரசர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார். 

ஆனால் இராமன் அரசே! இவனை விட வித்தையில் நான் வல்லவனானக இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா? என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள். அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்தாலே மிகவும் சுவையுடையதாக இருக்குமல்லவா? சரி உன் வித்தைகளை காட்டு என்று அனுமதி வழங்கினார். 

செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். நீ அதைச் செய்து காட்டு, அந்த வித்தைகளை நான் செய்து காட்டுகிறேன், என்று சவால் விட்டான். தெனாலிராமனோ பதட்டம் இல்லாமல் முன்னால் வந்து நின்றார். ஐயா! நான் ஒரே ஒரு வித்தையை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு, அதையே நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு செய்ய வேண்டும். உங்களால் முடியாவிட்டால், அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும், என்றார். 

வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக, நீ செய்து காட்டு என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்களில் நிறைய கொட்டிக் கொண்டார். அனைவரும் ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். இராமன் வித்தைக்காரனைப் பார்த்து இந்த வித்தையை நீர் உமது கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்ட வேண்டும் என்றார். வித்தைக்காரனால் எப்படி முடியும்? என்னை மன்னித்து விடுங்கள் என்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவரைப் பற்றி அறிந்து கொண்டார். பிறகு தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் என்றார். 

அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று பொய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள். என்று கேட்டுக் கொண்டார். 

அரசர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்..


இன்றைய செய்திகள் - 03.03.2023

* தமிழகத்தில் பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக ரூ.112 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* கோவை யானைகள் வழித்தடத்தில் உள்ள 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க ஐகோர்ட் உத்தரவு.

* தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிர்க்கட்சி தலைவரை உள்ளடக்கிய பரிந்துரைக் குழு தேவை: உச்ச நீதிமன்றம்.

* டெல்லி – ஜெய்ப்பூர் இடையே மின்சார விரைவு சாலை: இந்தியாவிலேயே முதல் முறையாக அமைகிறது.

* கிரீஸ் நாட்டில் கோர விபத்து - ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 36 பேர் உயிரிழப்பு.

* துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முன்னனி வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்.

* சர்வதேச போட்டியில் 500 விக்கெட் - ஜடேஜா புதிய சாதனை.


Today's Headlines

* Chief Minister M.K.Stalin has announced that increased relief of Rs.112 will be given to farmers affected by unseasonal heavy rains in Tamil Nadu.

 * Court ordered to disconnect electric connection of 118 brick kilns on  elephant route in coimbatore 

* The appointment of the Chief Election Commissioner requires a nomination committee that includes the Leader of the Opposition: Supreme Court.

 * Delhi-Jaipur Electrified Expressway: First in India

* A terrible accident in Greece - 36 people died when trains collided head-on.

* Dubai Tennis Championships: Top seed Djokovic advances to quarter-finals

* 500 wickets in international matches - Jadeja made a new record.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி