1138 ஆதிதிராவிட பள்ளிகள் கல்வித் துறையில் இணைப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 15, 2023

1138 ஆதிதிராவிட பள்ளிகள் கல்வித் துறையில் இணைப்பு

 

மாநிலம் முழுதும் உள்ள 1138 ஆதிதிராவிட பள்ளிகளை வரும் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வி துறையுடன் இணைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறை பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத் துறை ஹிந்து சமய அறநிலைய துறை வனத் துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வி துறையுடன் இணைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.


இதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு துறையும் மேற்கொண்டுள்ளது.


இந்த வரிசையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1138 பள்ளிகள் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிக் கல்வி துறையில் இணைக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத் துறை அறிவித்துள்ளது.


இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள் தொகுப்பூதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் விபரங்களை தாக்கல் செய்யுமாறு ஆதிதிராவிட நலத் துறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அதன் இயக்குனர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. அரசு பள்ளி என்றாலே அது பள்ளிக்கல்வி துறையின் கீழ் தான் செயல்பட வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி