ஆசிரியர் இடமாறுதல் மே மாதம் கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 15, 2023

ஆசிரியர் இடமாறுதல் மே மாதம் கவுன்சிலிங்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடக்க உள்ளது.

தமிழகத்தில் 24 ஆயிரம் தொடக்க பள்ளிகளில் 62 ஆயிரம், 7000 நடுநிலை பள்ளிகளில் 50 ஆயிரம், 6000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1.25 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். மொத்தம் 2.37 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

நிரந்தர பணியில் உள்ள இவர்களுக்கும் 10 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் தனித்தனியாக நடத்தப்படும்.

ஓராண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுவோருக்கு, பணிமூப்பு மற்றும் முன்னுரிமை சலுகைகள் அடிப்படையில், விரும்பும் ஊர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும்.

இதன்படி வரும் கல்வி ஆண்டுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கும் முன்பே மே மாதத்தில் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக இருக்கும் பணியிட விபரங்களை பட்டியலாக தயாரிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

1 comment:

 1. அனைத்து துறை (ADW / BC MBC/ ST / FOREST / SW / OTHER ALL DEPARTMENTS) அரசு பள்ளி ஆசிரியர்களும் இந்த பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு விரும்பிய துறை பள்ளிகளுக்கு பணியிட மாறுதலில் செல்ல அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

  நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் பணியிட மாறுதலில் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் EMIS இணையதள வழியே மட்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

  அல்லது

  துறை மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் மாறுதல் சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும்

  வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வின் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கும் ஒன்றியங்களுக்கும் பணியிட மாறுதலில் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  Thanks kalviseithi

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி