அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 21, 2023

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

 

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...


  அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...


அரசுப்பள்ளி  நம்பள்ளி....


சேர்த்திடுங்கள் நம் குழந்தைகளை அங்கே...


அரசுப் பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது 


             அரசு அறிவிப்பு.

✳️LKG முதல்  8ஆம் வகுப்பு வரை .


✳️தெரிந்தவர்கள் புதுப்பித்துக்கொள்க..


✳️ தெரியாதவர்கள் தெரிந்துகொள்க..


✳️அரசுப் பள்ளியில் பயின்றால்...


✳️கட்டணமில்லா கல்வி...


✳️ ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில்  20% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


✳️ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை , சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில 


7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


✳️பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.


✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி .


✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.


✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 , 


ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, 


ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.


அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.


✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி .


✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.


✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 , 


ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, 


ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.


✳️விலையில்லா புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கும்...


✳️விலையில்லா  குறிப்பேடுகள்- 3 பருவம்


✳️விலையில்லா சீருடைகள்- 4 செட்.


✳️விலையில்லா புத்தகப்பை.


✳️விலையில்லா காலணிகள்.


✳️வண்ண பென்சில்கள்.


✳️கணித உபகரணப் பெட்டி.


✳️புவியியல்  வரைபட நூல்.


✳️தினந்தோறும்  முட்டையுடன் சத்துணவு.


✳️இலவச பேருந்து பயண அட்டை...


✳️ போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்...


✳️ அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறன் வளர்க்க தேன்சிட்டு மாத இதழ்...


✳️ விலையில்லா மிதிவண்டி...


✳️ விலையில்லா மடிக்கணினி...


இன்னும் நன்மைகள் ஏராளம் ஏராளம்....


"அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்"


அன்பு பெற்றோர்களே, 


தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பீர்... அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடுவீர்

5 comments:

 1. Government school teachers
  Please admit your children in your school.

  ReplyDelete
 2. அனைத்தும் கிடைக்கும் கல்வியைத் தவிர.

  ReplyDelete
 3. தனியார் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கம் கட்டுபடுத்தப்படுகிறது அதை நிர்வகிப்பவர்கள் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்கள் ஆனால் அரசுப்பள்ளியில் மாணவர்கள் பதின்பருவத்தில் கட்டுபாடுகளை மீறும் உணர்வுடன் இருக்கிறார்கள் இது இயற்கைதான் ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு வழங்காதவரை அரசுபள்ளிகளின் நிலை இன்னும் மோசமாகுமே தவிர மேம்படாது இந்த உண்மை தெரியாத பொதுமக்கள் தாங்கள் எளிமையாக ஆசிரியர்களை குறைகூறுகின்றனர் ஒழுக்கம் இல்லா கல்வி பாழ் என்பதை உணராமல் அரசியல் வாதிகளுக்கு தெரியும் ஆனால் செய்யமாட்டார்கள் 25 % மாணவர்களை அரசு பணத்தில் தங்கள் பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்றியுள்ளனர் அவர்கள் நோக்கம் அரசுப்பள்ளியினை மேம்படுத்துவதல்ல

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி