பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைக்கும் பணி தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2023

பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைக்கும் பணி தீவிரம்

 

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்க ஏதுவாக ஆசிரியர், பணியாளர் பணியிட விவரங்களை சேகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.


இதுகுறித்து ஆதிதிராவிட நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: 

தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத் துறை, அறநிலையத் துறை, வனத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படும் என்று நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


அதை செயல்படுத்தும் விதமாக, மாநிலம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின்கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து அப்பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர ஆசிரியர், தொகுப்பூதிய ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக பணியாளர் விவரங்களை ஏப்.20-க்குள்தாக்கல் செய்ய வேண்டும். பள்ளிகளின் அசையும், அசையா சொத்துகள், கட்டிடங்கள் உள்ளிட்ட விவரங்களையும் தரவேண்டும். மாவட்ட வாரியாக தகவல்களை தொகுத்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதால் தாமதமின்றி துரிதமாகபணியை முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6 comments:

  1. அறைச மாவவே அறைக்காதீங்க

    ReplyDelete
  2. நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் பள்ளிக்கல்வித்துறையில் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருந்தும்...

    நலத்துறை பள்ளிகளில் பணியாற்றுவதால் வேறு மாவட்டத்தில் பணிபுரிகின்றனர் குடும்பத்தினரை விட்டு பிரிந்து பணி புரிகின்றனர். தங்களது இருப்பிடத்திற்கு அருகில் பதவி உயர்வு கிடைக்காததால் பதவி உயர்வினை துறப்பு செய்து வருகின்றனர் பல வருடங்களாக இன்னும் சில ஆசிரியர்கள் பதவி உயர்வு வேண்டாம் என்று விட்டனர். இனிவரும் காலங்களில் இந்த பிரச்சனை இருக்காது தமிழக அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது அரசு பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் இருப்பது தான் சிறந்தது ஆசிரியர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் பணியிட மாறுதலும் பதவி உயர்வு மாறுதலும் பெறுவது தற்போது எளிதாகிவிட்டது.சிரமங்கள் குறைக்கப்பட்டு விட்டது. இனிமேல் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் அனைத்து ஆசிரியர்களும் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு என்று செல்ல நல்லதொரு செயலை அரசு செய்திருக்கிறது

    ReplyDelete
  3. Please do join govt aided schools also under the control of Education Department.

    ReplyDelete
  4. உதவி பெறும் பள்ளிகளும் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும், இதனால் ஏராளமானோர் வேலை பெறுவார்கள்

    ReplyDelete
  5. பள்ளிக்கல்வித்துறையுடன் ஆதிதிராவிட நலப் பள்ளிகளை இணைத்த உடனே நலத்துறையில் பணிபுரிந்த அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அவர்கள் விரும்பும் பள்ளிகளில் பணியிட மாறுதல் பெறுகின்ற வகையில் அரசு சிறப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது தமிழக அரசிற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள்

    ReplyDelete
  6. Merge Corporation schools with Pallikalvithurai.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி