10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வு அறிமுகம்: சிபிஎஸ்இ அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 12, 2023

10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வு அறிமுகம்: சிபிஎஸ்இ அறிவிப்பு!

 


நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 83.40 % ஆக இருந்தது. அதைவிட இந்த கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், 14 லட்சத்து 50 ஆயிரத்து 174 பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. குறிப்பாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.40% சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


இதேபோல் இன்று பிற்பகல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 10,12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஏதுவாக துணைத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. 10ம் வகுப்பில் 2 பாடங்களிலும், 12ம் வகுப்பில் ஒரு பாடத்திலும் அதிக மதிப்பெண் எடுக்க துணைத்தேர்வு எழுதலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி