CBSE - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91% பேர் தேர்ச்சி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2023

CBSE - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91% பேர் தேர்ச்சி!!

 

LINK : Click here to view the Results

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாணவ, மாணிவிகள் தங்களது தேர்வு முடிவுகளை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் பிப்.,15 முதல் ஏப்., 5 வரை சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வினை 16.9 லட்சம் மாணவர்கள் 6,759 மையங்களில் எழுதினர். இந்த நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5.38% குறைந்துள்ளது.

அதே சமயம் இது கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91%, பெங்களூருவில் 98.64%, சென்னை மண்டலத்தில் 97.40% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் யார் முதலிடம், 2ம் இடம், 3ம் இடம் என்பதை சிபிஎஸ்இ அறிவிக்கவில்லை. மாணவர்களிடம் தேவையற்ற போட்டியையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க யார் முதலிடம், 2ம் இடம்,3ம் இடம் விவரத்தை வெளியிடவில்லை.சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.01% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


The post சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91% பேர் தேர்ச்சி!!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி