+2 Result | 600 - க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2023

+2 Result | 600 - க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை !

 

திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி , 600 - க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை !

பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி எஸ்.நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். தேர்வில் பங்கேற்ற 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி எஸ்.நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார். அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நந்தினி அசத்தியுள்ளார்.

சரவணக்குமார் – பானுப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி அனைத்து பாடங்களிலும் சதம் எடுத்து அபார சாதனை புரிந்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து பேட்டியளித்த மாணவி எஸ்.நந்தினி; எனது தந்தை கூலித் தொழிலாளி; படிப்புதான் ஒரே சொத்து என கூறி பெற்றோர் என்னை வளர்த்தனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் அளித்த ஊக்கத்தால்தான் சாதனை படைக்க முடிந்தது என்றார். மேலும் தான் ஆடிட்டராக விரும்புவதாக கூறினார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே எனது ஆசை; அதற்காகவே கடினமாக படித்தேன் எனவும் மாணவி எஸ்.நந்தினி தெரிவித்துள்ளார்.



2 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. 600 க்கு 600 எடுத்தும்...அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தும்.....அரசு பள்ளிகளில் படித்த சலுகைகள் பெற முடியாத அவல நிலை...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி