குரு பெயர்ச்சி பலன் 2023: பரணி நட்சத்திரத்தில் குருவின் பயணம்..இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடி தூள்: - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 24, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023: பரணி நட்சத்திரத்தில் குருவின் பயணம்..இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடி தூள்:

 

குரு பகவான் நவ கிரகங்களின் முழு சுப கிரகம். மேஷ ராசியில் சர்ப்ப கிரகமான ராகு உடன் பயணம் செய்கிறார்.


குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவான் இந்த மாதம் சுக்கிரன் நட்சத்திரமான பரணியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பயணத்தினாலும் பார்வையினாலும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது சுக்கிரதிசையை போல யோகம் யாருக்கெல்லாம் கை கூடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.


மேஷம்: ஜென்ம ராசியில் ராகு உடன் குரு ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயணம் செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொழிலில் சொந்த முதலீடுகள் செய்ய வேண்டாம். குரு பெயர்ச்சியின் இறுதி கால கட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் வந்து நீங்கும்.


ரிஷபம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு வருகிறார். கடந்த குரு பெயர்ச்சியில் பல சோதனைகளை கடந்த ரிஷப ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரப்போகிறது. திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும். விரைய செலவுகள் வருகிறதே என்று யோசித்தாலும் இடைபட்ட காலங்களில் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் உண்டாகும். வெளி மாநிலம் அல்லது வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும்.


மிதுனம்: லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். கடந்த வருடத்தில் வேலை தொழில் ரீதியாக சிரமமான சூழ்நிலைகளை சந்தித்தவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமான முடிவுகள் வரப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு கிடைக்கும்.தொழில் ரீதியான லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். விரையச் செலவுகள் இருந்தாலும் வருமானமும் வரும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.


கடகம்: குரு உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும்.மாற்றம் இல்லாதவர்களுக்கு செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும். கேது,8க்குடையன்,6க்குடையவன் சாரத்தில் குரு செல்ல இருப்பதால் கடன், தடை என்பது அதிகமாக இருக்கும். செய் தொழிலை விட்டு வேறு தொழில் அல்லது வேலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. சனி 2020 ல் 11ஆம் வீட்டில் செல்வதால் குரு பெயர்ச்சியின் மத்தியில் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.


சிம்மம்: சிம்மம் ராசிக்கு குரு பகவான் 9ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் நிறைய பண வரவை தரப்போகிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சொத்து சேர்க்கை ஏற்படும். பெண்கள் தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. ஆன்மீக பயணம் செல்வீர்கள். வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்யலாம். ஜோதிடம்,ஆன்மீகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல தனச்சேர்க்கை உண்டாகும். புரமோசனுடன் கூடிய புதிய வேலை கிடைக்கும். அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.


கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு அஷ்டம குருவின் பயணம் திடீர் ராஜயோகத்தை தரப்போகிறார். நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும். வேலையில் வேலை செய்யும் இடத்தில் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.


துலாம்: களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் இருந்து குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் யோகமான கால கட்டம்தான் என்றாலும் தொழில் முதலீடுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விசயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. புது தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். குரு சுக்கிரனின் நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போவதால் கணவன் மனைவி இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு பொன்னகை சேர்க்கை அதிகரிக்கும்.


விருச்சிகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். கடன் நோய் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிரிகள் பிரச்சினை வம்பு வழக்கு பிரச்சினை முடிவிற்கு வரப்போகிறது. ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் குருவின் பார்வை குடும்ப ஸ்தானம், தொழில் ஸ்தானத்தை பார்வையிடுவதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.


தனுசு: தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இது யோக காலம் என்றே சொல்லலாம். குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். எந்த புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1. கணவன் மனைவி இடையேயான உறவில் அன்பு அதிகரிக்கும். நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும்.


மகரம்: நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். அம்மாவிற்கு அற்புதமாக இருக்கும். தாயின் உடல் நிலை பிரச்சினைகள் நீங்கும். புது வீடு வாங்கலாம். வேலையில் இட மாற்றம் நிகழும். சுக்கிரன் சாரத்தில் குரு செல்லும் போதும் நன்மைகள் அதிகரிக்கும். சுக போகங்களை அனுபவிக்கப்போகிறீர்கள். 2024 ஏப்ரல் இறுதி வரைக்கும் உங்களுக்கு விபரீத ராஜயோக காலம்.


கும்பம்: உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். வேலைக்காக நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்கள் இருக்கும் மூத்த சகோதர சகோதரிகளின் உதவிகள் தேடி வரும். சுக்கிரன் சாரத்தில் பரணி நட்சத்திரத்தில் குரு செல்லும் போது நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். சந்தோஷ சம்பவங்கள் அதிகம் நடைபெறும் உற்சாகமாக அனுபவிக்கத் தயாராகுங்கள்.


மீனம்: உங்கள் ராசி நாதன் குரு உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு உடன் பயணம் செய்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ராகு உடன் குரு பயணம் செய்வதால் வாக்கில் கவனம் தேவை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த தன விசயங்கள் தங்களுக்கு சாதகமாக முடியும். குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் ரீதியான முன்னேற்றம் நிகழும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். குரு கேதுவை கடந்ததும் தொழில் ஆதாயம் பெருகும். வம்பு, வழக்கு ,நீதிமன்ற வழக்குகள் தங்களுக்கு சாதகமாக வரும். சுக்கிரன் சாரமான பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்யும் போது எதிர்பாராத பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

3 comments:

  1. 😂 ஆசிரியர்கள் வலைத்தளத்துல ஜோதிடமா? 😂

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி