பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை அரசு கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2023

பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை அரசு கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!

 

பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமில்லை, என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும், என இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.


அவர் தெரிவித்திருப்பதாவது: 


தமிழகத்தில் பதவி உயர்வுக்கான கல்வித்தகுதியுடைய ஆசிரியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு ஜனவரி முதல் நாளை அடிப்படையாகக்கொண்டு தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டு பட்டதாரி ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.


பதவி உயர்வினை பெற தற்போது ஆசிரியர் பணியில் உள்ளோர் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற வேண்டும், என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.


இதுவரை பணி மூப்பு அடிப்படையில் தேர்ந்தோர் பட்டியல் வெளியிட்டு அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலை இருந்து வந்தது.அதிலும் உயர், மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் தேர்ந்தோர் பட்டியல் 3 ஆண்டுகளாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தொடர்ச்சியாக கோரிக்கை மனு அளித்தும் வெகு விரைவில் நடத்துவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.


2003 க்குப்பின் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் என்பது கிடையாது. அந்த தேதியிலிருந்து விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்கியிருந்தால் இன்றளவில் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் சென்றிருப்பார்கள். ஆனால் 7 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை, என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

6 comments:

 1. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் நீங்கள் ஆசிரியராக பணிபுரிய தகுதியில்லை என்று தானே அர்த்தம்

  ReplyDelete
 2. நீங்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அரசு பத்துவருடங்கள் வாய்ப்பு கொடுத்தும் தேர்ச்சி பெறாதது உங்கள் தவறு. உங்களால் தான் தகுதிபெற்ற ஆசிரியர்களுக்கு இன்னமும் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. உன்னை போன்ற கேடுகெட்ட புத்தி உள்ளவனுக்கு கடைசிவரை அரசு வேலை கிடைக்காது நானும் தகுதிதேர்வில் தகுதி பெற்று வேலையில்தான் உள்ளேன்.

   Delete
  2. பின்பு நீ எதற்கு கவலைப்படுகிறாய்?

   Delete
  3. உன்னுடைய கீழ்த்தரமான வாக்கு என்றும் பலிக்காது. அது உனக்கு திரும்பும்

   Delete
 3. ஊழியர் களுக்கு சாதகமான தீர்ப்புகளுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததில் லை.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி