தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட கோரிய வண்டுகோள் கடிதம் பார்வையில் காணும் கடிதத்தின் வழியாக பெறப்பட்டுள்ளது.
சங்கங்களின் மேற்கண்ட கோரிக்கையினை ஏற்று பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர் பொறுப்பாளர்களுடன் 25.07.2023 முற்பகல் 10.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மேற்கண்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு சங்கத்தின் சார்பாக ஒருவர் மட்டுமே கலந்து கொள்ளவும் , தங்களது சங்கத்தின் சார்பாக கருத்துருக்களை தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தங்களது கருத்துக்கள் சார்பான விவரங்களை கூட்டம் நடைபெறும் நாளன்று அதன் நகலொன்றினை நேரில் சமர்ப்பிக்கவும் , dse@tnschools.gov.in என்ற முகவரிக்கு இ - மெயில் வழியாக Soft Copy அனுப்பிடவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் ஒரு நகல் வேணுமா...
ReplyDeleteஒரு ஆணியும் சங்கம் .....து
ReplyDeleteஎந்த கோரிக்கையும் வேண்டாம். ஒரே கோரிக்கை பழைய ஓய்வு ஊதியம் மட்டும் கேளுங்கள். உதவாத 4 கோரிக்கை வைத்து விட்டு,அதை நிறைவேற்றியதுக்கு சந்தா பணத்தில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவீர்கள்.
ReplyDeleteஅரசு ஊழியர்கள்
ReplyDeleteஆசிரியர்கள் கூட்டமைப்பு
போராட்டம் அறிவிப்பு..
அரசுடன்
பேச்சு வார்த்தை...
போராட்ட
அறிவிப்பு வாபஸ்...
கோரிக்கை எதுவும்
நிறைவேற்றப்படாது...
மீண்டும்
போராட்டம் அறிவிப்பு...
மீண்டும் அரசுடன்
பேச்சு வார்த்தை...
மீண்டும் போராட்ட
அறிவிப்பு வாபஸ்...
மீண்டும் கோரிக்கை
நிறைவேற்றப்படாது...
ரீப்பீட்டு...
இப்படித்தான் கடந்த
இரண்டரை வருடமாக சென்று கொண்டிருக்கிறது...
எடப்பாடி சங்கங்களை
கூப்பிட்டு பேசாமலேயே..
எதுவும்
நிறைவேற்றவில்லை..
ஸ்டாலின் சங்கங்களை
கூப்பிட்டு பேசிப்பேசி...
எதுவும்
நிறைவேற்றவில்லை...
வேறு எதுவும்
வேறுபாடில்லை....
எடப்பாடி அரசு ஊழியர்கள்
ஆசிரியர்களுக்கு எதிரி...
ஸ்டாலின் அரசு
ஊழியர்கள்
ஆசிரியர்களுக்கு துரோகி..
இப்படித்தான் பொருள்
கொள்ள வேண்டி உள்ளது..
எதிரியை நம்பலாம்...
நம்ப வைத்து கழுத்தறுத்துக்
கொண்டிருக்கும் துரோகியை
நம்பவே கூடாது...
விழித்தெழுங்கள்
சங்கத் தலைமமைகளே...
நாடாளுமன்ற தேர்தல்
நெருங்குகிறது....
ஆட்சியாளர்களுக்கு
புரியும் மொழியில்
பேசத் தயாராகுங்கள்...