காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னார்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி தரம் உயர்த்திய போது, 200க்கும் குறைவான மாணவர்களே இருந்தனர். இதை அறிந்த சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
கடந்த, 2019ம் ஆண்டு முதல் முறையாக, 10ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களை விமானத்தில், சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இடையில் இரண்டு ஆண்டுகள் கொரோனா வந்ததால் இந்த கல்வி சுற்றுலா பயணம் தடைபட்டது.கடந்த, 2022ம் ஆண்டு மீண்டும் கல்வி சுற்றுலா பயணத்தை தொடங்கி, மாணவர்களுடன் பெற்றோர்களையும், விமானத்தில் உடன் அழைத்துச் சென்றனர்.
இதை அடுத்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 400ஐ எட்டியுள்ளது. கடந்த வாரம் ஒரு பேட்ச் மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள், கோவையில் இருந்து விமானத்தில் சென்னை சென்றனர். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்த பின், ரயில் வழியாக கோவை வந்தடைந்தனர். இந்த பயணம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி