எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்கள் ஆக. 14-ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்கள் ஆக. 14-ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம்

 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் நடந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.


இரண்டாம் கட்ட கலந்தாய்வு: இந்நிலையில், ஆக. 11-ம் தேதி (நேற்று) மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலஅவகாசம் வரும் 14-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கல்லூரிகளில் சேராதவர்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி