முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை தெலங்கானா மாநில அதிகாரிகள் பார்வையிட்டனர். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, கடந்த 25ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை அறிய தெலங்கானா மாநில அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். தெலங்கானா முதல்வரின் தனிச்செயலாளர் ஸ்மிதா சபர்வால் தலைமையில் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட அதிகாரிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள ஜிசிசி பழைய பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். ராயபுரத்தில் ஊழல் மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவு பரிமாறப்படுவதை பார்வையிட்டனர். சமைக்கப்படும் இடம், உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் முறை பற்றி அதிகாரிகள் அறிந்து கொண்டனர். இதனிடையே தமிழகத்தில் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தால் 18 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி