சங்கங்கள் கோரிக்கைக்காகப் போராட அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும் - DEO!
இச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெறும்வரை இதனைக் கண்டித்து தொடர் போராட்டம் நடைபெறும் - TNPTF
-- -- -- --
வன்மையாகக் கண்டிக்கின்றோம்....
ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விதமாகப் போராடுவதற்கு அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணை பிறப்பித்த விருதுநகர் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களை TNPTF விருதுநகர் மாவட்டக்கிளையின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஜனநாயக நாட்டில் எவ்வித அனுமதியுமில்லாமல் கோரிக்கைகள் நிறைவேற ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களையே எதிர்த்துப் போராடும் காலத்தில்....
போராட அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணையிடும் விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல் வெட்கக்கேடு....
உடனே வாபஸ் வாங்கு!
வாபஸ் வாங்கும்வரை தொடர் போராட்டம்
முதல் கட்டமாக...
கண்டன ஆர்ப்பாட்டம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாள் : 04.09.2023 திங்கள் மாலை 5 மணி
இடம்: மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி)
சுப்பையா நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகம்
விருதுநகர்
TNPTF,விருநகர் மாவட்டம்
நாடு முழுவதும் லோக்சபா, மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வகை செய்யும் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளன
ReplyDeleteஒரே நாடு, ஒரே தேர்தல் வரட்டும், திமுக விற்க்கு பாடம் புகட்ட வேண்டும். எத்தனை தொகுதிகள் நம்மால் மட்டுமே வெற்றி பெற்றார்கள் என்பதை மறந்து விட்டனர். நம் சங்க தலைவர் மன்னிக்கவும் ஜால்றாக்களும், அதிமுக என்றால் உடனே , வேலை நிறுத்தம். திமுக என்றால் மிக பொறுமை.
ReplyDelete