தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் 27ம் தேதி வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2023

தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் 27ம் தேதி வெளியீடு

 

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெற்று முடிந்த தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் வரும் 27ம் தேதி பிற்பகல் மூன்று மணி அளவில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


மேலும் விடைத்தாள்களை மறுகூட்டல் செய்யவும், ஒளி நகல் பெறவும் விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையையும் சேர்த்து அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விடைத்தாள்களின் ஒளி நகல் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் பின்னர் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி