எமிஸ் பதிவேற்றம் குறித்து ஆசிரியர் பதிவிட்ட பராசக்தி பட வசன பாணி கருத்துக்கு வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2023

எமிஸ் பதிவேற்றம் குறித்து ஆசிரியர் பதிவிட்ட பராசக்தி பட வசன பாணி கருத்துக்கு வரவேற்பு

 

'பராசக்தி' சினிமா வசனத்தை போல 'எமிஸ்' இணையதள பதிவேற்றம் குறித்து ஆசிரியர் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வைரலாகி வருகிறது.


தமிழக அரசு கல்வித்துறை சார்பில் 'எமிஸ்' இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. இதில் மாணவர்கள் குறித்த பல்வேறு விபரங்களை அந்தந்த அரசு பள்ளி ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்யப்படுகிறது.


இதனால் ஏற்படும் மன உளைச்சலை 'பராசக்தி' சினிமா வசன பாணியில் ஆசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அதில் அந்த ஆசிரியர் பேசியிருப்பதாவது:


குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் தேர்வுத்தாள் டவுன்லோடு செய்து தேர்வு வைக்கவில்லை; பல்வேறு 'எமிஸ்' பதிவேற்றங்களை முடிக்கவில்லை என்று. நீங்கள் நினைப்பீர்கள் நான் எதையெல்லாம் மறுக்க போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. இலவச பதிவுகளை கொடுக்காமல் போட சொன்னீர்கள் மறுத்தேன்.


உடல்நலக் கூறுகளை பதிவிட சொன்னீர்கள். நான் மருத்துவம் படிக்கவில்லை எனச் சொன்னேன். வினாத்தாள் பிற்பகல் 2:00 மணிக்கு வரும் என்றார்கள். தேடினேன்... தேடினேன்... கிடைக்கவில்லை. பின் எமிசில் வரும் என்றார்கள். அதிலும் தேடினேன்... தேடினேன்... கிடைக்கவில்லை.


தேர்வுத்தாளை தேடித்தேடி அலைய விட்டது யார் குற்றம்? வலைதளத்தின் குற்றமா? இல்லை வலைதளத்தை வைத்து மாணவர்களின் கல்வியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீணர்களின் குற்றமா?


உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்கிறீர்கள்? நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன்.


வினாத்தாளை தேடித்தேடி வலைதளங்களின் பின்னால் ஓடினேன்... ஓடினேன். நெட் பேலன்ஸ் தீரும் வரை ஓடினேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது.


தேர்வுத் தாளுக்காக ஆசிரியர்களை இப்படி அலையவிட்டது யார் குற்றம்? ஒன்றுக்கும் உதவாத எமிசின் குற்றமா? அதை சரியாக வைக்காத எமிஸ் டீமின் குற்றமா? நிம்மதியாக பாடம் நடத்த தேர்வு நடத்த விட்டீர்களா எங்களை...'


இவ்வாறு அதில் அந்த ஆசிரியர் தன் கண்டனக் கருத்தைப் பேசியுள்ளார்.


இந்தப் பதிவு ஆசிரியர்கள் தொடர்புடைய குழுக்களில் வைரலாகி பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது.

4 comments:

  1. வசனம் பேசி பிரயோஜனம் இல்லை மங்குனி மந்திரியாரே... பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி தராமல் உங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவது இல்லை

    ReplyDelete
  2. டேபாசிட் இழப்பது உறுதி

    ReplyDelete
  3. இல்லம் தேடி கல்வி என்ற பெயரில் மக்கள் வரி பணம் வீண் செலவு. ஆசிரியர் சங்கங்கள் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் இனைய வழி தேர்வு ரத்து அவசியம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி