பின்லாந்து நாட்டின் கல்வி அமைச்சர் அனாமஜா ஹென்ரிக்சன் மற்றும் அதிகாரிகள், சென்னை வந்துள்ளனர்.அம்பத்துார் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும் திறன் பயிற்சிகளை பார்வையிட்டனர்.
டாடா குழுமத்துடன் இணைந்து, 71 அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் உருவாக்கப்பட்டுள்ள, 'தொழில் 4.0' தரத்திலான தொழில்நுட்ப மையங்களையும், அசோக் லேலண்ட், மாருதி சுசுகி நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, நவீன தொழில்நுட்ப பணிமனைகளையும் பார்வையிட்டனர்.
அதன்பின், தலைமை செயலகத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர். அப்போது, தமிழக மாணவர்கள் பின்லாந்திலும், பின்லாந்து மாணவர்கள் தமிழகத்திலும், திறன் பயிற்சி பெற, இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜயந்த், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர் சுந்தரவள்ளி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யாபங்கேற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி