போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல - பள்ளிக் கல்வித்துறை விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2023

போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதனால், அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைந்துள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், சம வேலை, சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.


தமிழ்நாட்டில், கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் பணிக்குச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 8,370 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களுக்கு தர ஊதியமாக 2,800 ரூபாய் வழங்கப்பட்டது. அதேநேரத்தில் 2009 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பின் பணிக்குச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 5,200 ரூபாயும், தர ஊதியமாக 2, 800 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.


இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தியே சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆனால், ஊதியத்தில் முரண்பாடு ஏதும் இல்லை என பள்ளிகல்வித்துறை விளக்கம் அளிக்கிறது. அதாவது, ஆறாவது ஊதியக்குழு 2009 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டபோது, முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டதால், 2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டதாக கூறியுள்ளது.


ஆனால், 2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு, 6 வது ஊதிய குழு அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், புதிய ஊதிய விகிதத்தை ஒப்புக்கொண்டு பணியில் சேர்ந்த பின்னர் தற்போது அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

- News 18 Tamil Nadu

10 comments:

 1. அப்புறம் எதுக்கு தேர்தல் வாக்குறுதியில் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது?

  ReplyDelete
 2. அப்புறம் எதுக்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய முதலமைச்சர் கடந்த கால போராட்டங்களில் வந்து உங்களது ஊதிய முரண்பாடு ஆட்சிக்கு வந்தவுடன் சரி செய்யப்படும் என்று ஏன் வாக்குறுதி அளித்தார்?

  ReplyDelete
 3. பள்ளிக்கல்வித்துறை கொடுக்கும் இந்த வெங்காய விளக்கத்தை.....

  தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்து வெளியிட்ட முதலமைச்சர் இடம் சென்று விளக்கம் கொடுத்து இருக்கலாமே.....

  ReplyDelete
 4. திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதி வரிசை எண் 311 வெளியிடும்போது பள்ளிக்கல்வித்துறை தூங்கிக்கொண்டிருந்ததா?

  அப்போதே பள்ளிக்கல்வித்துறை இந்த வெங்காய விளக்கத்தை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது அல்லது முதலமைச்சராக பதவி ஏற்ற போது விளக்கமாக எடுத்து சொல்லி இருக்கலாமே முதலமைச்சரிடம்

  அப்புறம் எதுக்கு மூன்று நபர் குழு அமைக்கப்பட்டது?

  ReplyDelete
 5. அம்மாவை போல இவர்கள் அனைவரையும் பணியை விட்டு நீக்குங்கள். அவர்களுக்கு தரும் சம்பளத்தில் பாதி தாருங்கள், நாங்கள் பணியாற்ற தயாராக உள்ளோம். இவர்களுக்கு எவ்வளவு தந்தாலும் பத்தாது. நாங்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து உள்ளோம், டெட் தேர்ச்சியும் பெற்று உள்ளோம்.

  ReplyDelete
 6. தேர்தல் அறிக்கை என்பது இதுவெல்லாம் செய்யாலாம் என நினைப்பது. பிரதமர் கூட 15 லட்சம் தருகிறேன் என கூறினார். தந்தாரா? அதன் பின் நிதி நிலை ஒத்துழைக்க வில்லை. நீங்கள் திமுக விற்கு வாக்களிக்க வில்லை என்றாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் . உங்களுக்கு சம்பளம் பத்தவில்லை என்றால் தயவு செய்து உங்கள் பணியை ராஜினாமா செய்து விடுங்கள்..நாங்கள் உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் போதும், உங்களை விட சிறப்பாக பணி செய்வோம். தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள். இவர்களை பணியை விட்டு நீக்கி விட்டு எங்களை பணி அமர்த்துங்கள். அரசு ஊழியர்கள் திமுக விற்கு வாக்களிக்க வேண்டாம். இலவச பஸ், உரிமை தொகை திமுக அதிக அளவு வாக்கு வாங்கி அதிகரித்து உள்ளது. நீங்கள் வாக்கு என்பதை சொல்லி மிரட்டுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எவ்வளவு தந்தாலும் பத்தாது. நீங்கள் அனைவரும் பணியை ராஜினாமா செய்யுங்கள். உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் நாங்கள் வேலை செய்கிறோம். உங்களுக்கு மாதம் 5 லட்சம் தந்தாலும் பத்தாது. 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி படும் பாடை நினைத்து பாருங்கள். டெட் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி