அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2023

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

 

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த நிலையில், தொடர் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைந்து தீர்வு எட்டப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். உங்களுடைய கோரிக்கைகளை முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து விரைவாக முடிவை நாங்கள் அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார். 


சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று இன்று இரவே அறிவித்தால் போராட்டத்தை வாபஸ் பெற தயார். அதுவரை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்" என்று கூறினார்கள்.

5 comments:

 1. வேலையை ராஜினாமா செய்து விடுங்கள். அவர்கள் உங்களுக்கு தரும் சம்பளத்தில் பாதி தந்தால் போதும்.

  ReplyDelete
  Replies
  1. எங்கள் உரிமையை கேட்கிறோம்.....உனக்கு வேண்டியதை அரசிடம் கேட்பதை விடுத்து, அடத்தவர் வயிற்றில் adikkathe....

   Delete
 2. நீ யார்ரா?? கோமாளி..

  ReplyDelete
 3. இது கலைஞர் ஆட்சி இல்லை போராட்டத்திற்கு பயப்படுவதற்க்கு வரும் மக்களவை தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள் ஆசிரியர்கள் வயிற்றில் அடித்தல் ஆண்டவனையே பலிப்பபதற்க்கு சமம்

  ReplyDelete
 4. அரசு ஊழியர்கள் திமுக விற்கு வாக்களிக்க வேண்டாம். இலவச பஸ், உரிமை தொகை திமுக அதிக அளவு வாக்கு வாங்கி அதிகரித்து உள்ளது. நீங்கள் வாக்கு என்பதை சொல்லி மிரட்டுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எவ்வளவு தந்தாலும் பத்தாது. நீங்கள் அனைவரும் பணியை ராஜினாமா செய்யுங்கள். உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் நாங்கள் வேலை செய்கிறோம். உங்களுக்கு மாதம் 5 லட்சம் தந்தாலும் பத்தாது. 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி படும் பாடை நினைத்து பாருங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி