யுபிஐ எனச் சொல்லப்படுகிற எண்ம முறையில் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்திற்கு மாற்றாக எண்ம பரிவர்த்தனைகள் எளிமையாக இருந்தாலும் நிறைய தவறுதலான பரிவர்த்தனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நீங்கள் வேறு ஒருவருக்கு தவறுதலாக யுபிஐ பரிவர்த்தனை செய்திருந்தால் அதனைத் திரும்ப பெற செய்ய வேண்டியவைக் குறித்து பார்க்கலாம்.
- முதலில் எந்த யுபிஐ சேவை வழங்குனர் (ஜிபே, பேடிஎம், போன்பே) வழியாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதோ அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் அளிக்க வேண்டும். அதிகப்பட்சம் 24 - 48 மணிநேரத்திற்குள் பரிவர்த்தனை நீக்கப்பட்டு உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்க வழி செய்யப்படும்.
- வழங்குனரால் தீர்க்கப்படாத கோரிக்கைகளை இந்திய தேசிய பண செலுத்துகை நிறுவனத்தின் (என்.பி.சி.ஐ.) இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம்.
புகாரின் போது பரிவர்த்தனைக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். பரிவர்த்தனை வகை, வங்கி பெயர், யுபிஐ ஐடி, மெயில் ஐடி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
என்.பி.சி.ஐ. சார்பில் உங்களைத் தொடர்பு கொண்டு புகாரை நிவர்த்தி செய்வார்கள்.
- அதே வேளையில், வங்கியைத் தொடர்பு கொண்டும் நீங்கள் புகார் அளிக்கலாம். நேரிலோ அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டோ இந்தப் புகாரை நீங்கள் அளிக்க முடியும்.
பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யுபிஐ ஐடி, பணம் பெறுபவரின் பெயர், செல்போன் எண், அனுப்பும் தொகை ஆகியவற்றை சரிபார்த்துவிட்டு அனுப்புவது நல்லது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி