ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகனின் தந்தை - மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2023

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகனின் தந்தை - மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் ஆகும். இங்கு இவருக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர். ராமேஸ்வர முருகன் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.


இந்நிலையில் இன்று காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வெள்ளாங்கோவில் உள்ள ராமேஸ்வர முருகன் தந்தை வீட்டிற்கு சோதனையிடுவதற்காக வந்தனர். வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை பூட்டினர். வீட்டில் ராமேஸ்வர முருகனின் தாய்-தந்தை மட்டும் இருந்தனர்.


வீட்டில் இருந்து வெளியே யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வருகின்றனர்.


இதேபோல் ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு ஈரோடு அக்ரஹாரம் வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டிற்கும் இன்று காலை வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டிலும் சோதனையிட்டு வருகின்றனர்.


ராமேஸ்வர முருகன் பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி