ஆசிரியர்கள் எங்கே தோற்றுப்போகின்றனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2023

ஆசிரியர்கள் எங்கே தோற்றுப்போகின்றனர்

ஆசிரியர்கள் எங்கே தோற்றுப்போகின்றனர்?


📝ஓர் ஆசிரியருக்கு பிரச்சினை என்று வரும்பொழுது,

அவர் தொடக்கப்பள்ளியா?

ஆரம்பப் பள்ளியா?

கூட்டணியா?

SSTA?...

மன்றமா? எனப் பார்த்து பிரிந்து நிற்கும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.


📝ஆசிரியர் இனத்திற்கு ஒரு பிரச்சினை என்னும்பொழுது,

இடைநிலை ஆசிரியருக்கா?

பட்டதாரி ஆசிரியருக்கா?

முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கா? எனப் பாகுபாடு பார்க்கும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்..


📝ஓர் ஆசிரியர் தவறு செய்தால், 

அவரைக் கண்டிப்பதையோ,

தண்டிப்பதையோ

தடுக்க சங்கம் என்ற போர்வையில் முன்னே ஒரு சங்கம்

முன்னே  வரும்பொழுது

ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.


📝தவறே செய்யாத ஆசிரியர்கள் பாதிக்கப்படும்பொழுது, நமக்கேன் வம்பு என பிற ஆசிரியர்கள் ஒதுங்கி நிற்கும்பொழுது தோற்றுப்போகின்றனர்.


📝ஏதோ ஒரு சங்கத்தில்

இணைந்துவிட்டால்

அவர்கள் தவறு செய்யும்பொழுதும் 

குரல் எழுப்பாமல்

எப்பொழுது அமைதியாய் இருக்கத் தொடங்கினார்களோ

அன்றே ஆசிரியர்கள் தோற்கத் தொடங்கிவிட்டனர்


📝ஏதோ ஒரு மூலையில்

புயலோ, பூகம்பமோ என்றால் துடிக்கும் ஆசிரியர்கள்,

ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியருக்குப் பிரச்சினை என்றால் மட்டும் அமைதியாக இருக்கும்போது தோற்கத் தொடங்குகின்றனர்.


📝கல்விமுறையிலோ

கற்பித்தல் முறையிலோ ஒரு மாற்றம் வரும்பொழுது

அது சரியா? தவறா?

என விவாதிக்காமல்

அனைத்திற்கும் தலையாட்டும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.


📝சக ஆசிரியரின் திறமையைப் பாராட்ட மனமின்றி புறம்கூறத் தொடங்கும்பொழுது 

ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.


📝LKG, UKG க்கு பல்லாயிரம் ஆசிரியர்களை தரம் இறக்கியபோது, 

லட்சம் ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்தபொழுதே தோற்கத் தொடங்கினர்.


📝ஒரே பணிநிலையில்

வேலை பார்க்கும் 

சக ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைத்துக் கொடுக்கும்பொழுது உரத்தக் குரல் கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபொழுதே தோற்கத் தொடங்கினர்.


📝ஆசிரியர்கள் தங்களுடைய அளப்பரிய பணிக்கான பாராட்டு  மேடைகளிலும்,

ஊடகங்களிலும் என நம்பி, எப்பொழுது அவற்றைத் தேடத் தொடங்கினார்களோ!

அன்றே தோற்கவும் தொடங்கிவிட்டனர்.


📝கல்விமுறையில் உள்ள

பிரச்சினைகளை உணராமல்

அங்கன்வாடிகளை

தொடக்க நிலையும்,

தொடக்க நிலையை

உயர்நிலையும்,

உயர்நிலையை மேல்நிலையும்

மாற்றி ,மாற்றி 

குறை சொல்லத் தொடங்கும்போதே தோற்கவும் தொடங்கிவிட்டனர்.


📝ஊதியத்தை வைத்து,

பதவியை வைத்து,

என்றைக்கு ஆசிரியர்கள் தங்களைத் தரம்பிரித்துப் 

பழகத் தொடங்கினார்களோ அன்றே தோற்கத் தொடங்கிவிட்டனர்.


📝மாணவர்களிடம் குடிக்காதே எனச் சொல்லும்

ஆசிரியர்கள்,

அரசிடம் 

ஏன் சாராயக் கடைகள்? எனக் கேட்க முடியவில்லை!


📝சுற்றுச்சூழல் காப்போம் எனக் கற்றுத்தரும் ஆசிரியர்கள் 

அரசிடம் ஏன் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்? எனக் கேட்க முடியவில்லை.


📝தவறு எனத் தெரிந்தும்

நமக்கேன் வம்பு என

ஆசிரியர்கள் ஒதுங்கத் தொடங்கிய நாட்களிலேயே ஆசிரியர்களைத் தோல்விகளும் துரத்தத் தொடங்கி விட்டன.


உண்மை

என்னவெனில்

தோல்வி என்பதே இல்லை..

எல்லாம் தற்காலிகப் பின்னடைவு தான்..


தற்காலிகம்

நிரந்தரமானால்

அதுதான் தோல்வி..

9 comments:

 1. தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் பொறுப்பு உங்களிடம் இருந்து பறித்த போது எனக்கு ஏன் வம்பு என்று அனைத்து ஆசிரியர்களும் அமைதி காத்த அன்றே நீங்கள் தோற்று போய் விட்டீர்கள். உங்கள் urimayai காக்க அன்றே போராட்டம் பண்ணி இருக்க வேண்டும். இப்போது இருக்கும் காலத்தில் ஒரு நாளாவது நீங்கள் நீங்கள் நிம்மதியாக பள்ளியில் இருக்க முடிகின்றதா? வெறும் சம்பள உயர்வு மட்டும் நிம்மதி தராது ஆசிரியர் பெரு மக்களே. ஆசிரியர் என்றால் கேவலமாக பார்க்கும் நிலமைக்கு உங்கள் சம்பளம் போராட்டம் இருக்கின்றது. மக்களின் ஆதரவு இல்லாமல் எந்த போராட்டமும் வெற்றி பெறாது. நீங்கள் முழுவதுமாக தோற்று போய் விட்டீர்கள். நீங்கள் சம்பள உயர்வு எவ்வளவு பெற்றாலும் நிம்மதி பள்ளியில் நிம்மதி இல்லாமல் மருந்து வாங்குவதற்கு தான் பயன் பெற்று கொண்டு இருக்கின்றது என்பது உங்களுக்கே தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. 100% உண்மை. மிக சரியாக கூறினீர்கள்

   Delete
 2. ஆசிரியர்கள் வாசிக்கும் பழக்கத்தை கைவிட்ட பொழுதே தோற்றுப் போய்விட்டனர்.
  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்த பொழுது தோற்றுப் போக ஆரம்பித்தனர் .
  வகுப்பிற்குச் செல்லும் முன் பாடத்தை படித்து தயாரித்து குறிப்புகள் எடுக்கும் பழக்கத்தை கைவிட்டு மொபைல் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திய பொழுது தோற்றுப் போயினர்.

  ReplyDelete
 3. உங்கள் ஓட்டு தேவையில்லை

  ReplyDelete
 4. நாற்பதும் நமதே

  ReplyDelete
 5. Politicians are like diapers, we need to change them often for the same reason, yesterday stalin was opposite party and gave you a hope that he would do everything , but today he dont, yesterday admk rulers didnt respond to you, but today they are giving support.

  this is what politics, file a case in court. drag them to road, that is the only solution.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி