கல்வித்துறை உத்தரவு காற்றில் பறந்தது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2023

கல்வித்துறை உத்தரவு காற்றில் பறந்தது

 

விஜயதசமி அன்று பள்ளிகளை திறக்கும்படி தெரிவித்த கல்வித்துறையின் உத்தரவு காற்றில் பறந்தது.


விஜயதசமி நாளன்று பலரும் தங்கள் குழந்தைகளுக்கு கற்பித்தலை துவக்க விரும்புவர். எனவே விஜயதசமி நாளான நேற்றுமுன்தினம் துவக்க, நடுநிலைப்பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கையை நடத்தும்படி கல்வித்துறை அறிவித்தது.


முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.


அன்னூர் வட்டாரத்தில், 75 துவக்கப் பள்ளிகளும், 16 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் கல்வித் துறை உயர் அதிகாரிகள் விஜயதசமியன்று மாணவர் சேர்க்கையை நடத்த அறிவுறுத்தினர்.


எனினும் நேற்றுமுன்தினம் அன்னூர் வட்டாரத்தில் பல பள்ளிகள் திறக்கப்படவில்லை. விடுமுறை நாள் என்பதாலும் பலரும் தங்கள் வீடுகள் அலுவலகங்கள் தொழிற்சாலைகளில் வழிபாடு செய்வார்கள் என்பதாலும் திறக்கப்படவில்லை. கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவு நேற்றுமுன்தினம் காற்றில் பறந்தது. வட்டார கல்வி அலுவலகமும் நேற்றுமுன்தினம் காலை திறக்கப்படவில்லை.


இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் தர்மராஜிடம் கேட்டபோது, விஜயதசமியன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர் சேர்க்கை நடந்தது. எவ்வளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்கிற விவரம் விரைவில் தருகிறேன், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி