உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 83 பாடங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக அக்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த அக்.29-ம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பங்களில் அக்.30, 31-ல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து டிசம்பர் முதல்வாரத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்படும். இதற்கான விண்ணப்பகட்டணம், பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு என்டிஏ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி