TET பணி வாய்ப்பு வழங்க வலியுறுத்தல்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2023

TET பணி வாய்ப்பு வழங்க வலியுறுத்தல்!!!

 தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது:


மாநிலத்தில் 2013ல் டி.இ.டி., தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கின்றனர். பணிவாய்ப்பு வழங்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், டி.இ.டி., தேர்ச்சி பெற்றாலும் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.இது அவர்களின் நியாயமான கோரிக்கை.அ.தி.மு.க., ஆட்சியில் டி.இ.டி., தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நடத்திய போராட்டத்தில் தி.மு.க., பங்கேற்று ஆதரவு தெரிவித்தது. 


மேலும் பணிவாய்ப்பு வழங்கப்படும் என சட்டசபை தேர்தலில் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை.பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையிலும் டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் எதற்காக 10 ஆண்டுகளாக காத்திருக்க வேண்டும். 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. வாய்ப்பில்லை ராஜா......

    ReplyDelete
  2. 2013 க்கு மட்டுமே பணி நியமனம் செய்யுங்கள் என்று கேட்டால் கண்டிப்பாக அரசு நியமனத் தேர்வை தான் நடத்தும்.... அனைத்து வருடங்களிலும் தேர்ச்சி பெற்றோரின் மதிப்பெண்+வேலை வாய்ப்பு பதிவு வருடங்களுக்கு மதிப்பெண் இதை இரண்டையும் சேர்த்து தரவரிசை விட்டு பணி நியமனம் மேற்கொண்டால் நன்றாக இருக்கும்....

    ReplyDelete
  3. இப்போதைக்கு பணி நியமனம் இல்லை என தகவல். 2025 ஜூன் மாதத்தில் மட்டுமே , பணி நியமனம். எனவே உங்களுக்குள் போட்டி போட வேண்டாம்.

    ReplyDelete
  4. Don't forget the FRENCH REVOLT.... As teachers we know how to create the society and how to knock down the stupid politicians..... Don't mess with us, that's not good for your politics.... Mind it

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி