நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிப்பு - இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் ( SSTA ) அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2023

நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிப்பு - இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் ( SSTA ) அறிவிப்பு

போராட்டம் தொடரும்..!

ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால் எங்களுடைய இந்த கோரிக்கைஅ நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம் . அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் . பயிற்சிக்கு செல்லா ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம் .


நாளை எண்ணும் எழுத்தும் பயிற்சியைப் புறக்கணிப்பது 100% உறுதி.


எந்த தேதியையும் அறிவிக்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க இரண்டு மாதங்கள் கால அவகாசம் கேட்டதால் உடன்பாடு ஏற்படாமல் போராட்டத்தைத் தொடர முடிவு.

9 comments:

 1. தேர்தல் அறிக்கை என்பது இதுவெல்லாம் செய்யாலாம் என நினைப்பது. பிரதமர் கூட 15 லட்சம் தருகிறேன் என கூறினார். தந்தாரா? அதன் பின் நிதி நிலை ஒத்துழைக்க வில்லை. நீங்கள் திமுக விற்கு வாக்களிக்க வில்லை என்றாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் . உங்களுக்கு சம்பளம் பத்தவில்லை என்றால் தயவு செய்து உங்கள் பணியை ராஜினாமா செய்து விடுங்கள்..நாங்கள் உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் போதும், உங்களை விட சிறப்பாக பணி செய்வோம். தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள். இவர்களை பணியை விட்டு நீக்கி விட்டு எங்களை பணி அமர்த்துங்கள். அரசு ஊழியர்கள் திமுக விற்கு வாக்களிக்க வேண்டாம். இலவச பஸ், உரிமை தொகை திமுக அதிக அளவு வாக்கு வாங்கி அதிகரித்து உள்ளது. நீங்கள் வாக்கு என்பதை சொல்லி மிரட்டுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எவ்வளவு தந்தாலும் பத்தாது. நீங்கள் அனைவரும் பணியை ராஜினாமா செய்யுங்கள். உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் நாங்கள் வேலை செய்கிறோம். உங்களுக்கு மாதம் 5 லட்சம் தந்தாலும் பத்தாது. 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி படும் பாடை நினைத்து பாருங்கள். டெட் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

  ReplyDelete
  Replies
  1. ஹமாரா பீகார்வாலாவா நீங்க. அடுத்தவங்க தட்டுள இருக்கிறத புடுங்கி தின்ன ஆசைப்படாதீங்க

   Delete
  2. dharmapuri வாலா... நீ இப்போது இப்படி தான் சொல்லுவே வேலை கொடுத்தா பின்னர் வரிசை கட்டி போராட முதலில் நீ தான் வருவே.... அவன் உரிமைக்கு அவன் போராடுரான் நீ சைக்கிள் கேப் ல நுழையலாம் னு பார்க்கிறாய்......இது போன்ற கேவலமான புத்தி உன்னை கடைசி வரை பிரைவேட்லேயே குப்பை பொறுக்க வைக்கும்..... நல்ல எண்ணத்தை வளர்த்து கொள் வாழ்க்கை வளம் பெரும்...

   Delete
  3. அவர் தனியார் துறையில் பொறுகுவது இருக்கட்டும். நீங்கள் அரசாங்கத்தில் இருந்துகொண்டு சம்பளம் போத வில்லை என்று பிச்சை எடுக்குறீர்களே உங்களை என்ன சொல்வது

   Delete
 2. Dhanapal நீ எவ்ளோ koovunalum உனக்கு போஸ்டிங் கிடையாது.. கடைசி வரை koovikitte இரு

  ReplyDelete
 3. திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று திமுக வின் முக்கிய புள்ளிகள் கூட இறங்கி வேலை பார்க்க வில்லை. நாங்கள் யாரெல்லாம் வேறு கட்சிக்கு வாக்களிப்பார்களோ அவர்கள் குடும்பத்தாரிடம் எங்களுக்காக திமுக விற்கு வாக்களியுங்கள் என்று சத்தியம் வாங்கி வாக்களிக்க வைத்தோம். அவர்கள் இப்போது எங்களை ஏளனமாகப் பார்க்கிறார்கள்.

  ReplyDelete
 4. எனக்கு பணி தந்தால் எனக்கு மாதம் 30000 போதும் . எனக்கு DA கூட வேண்டாம்..நான் எளிமையான வாழ்வியல் முறையை கடை பிடிப்பவன். நான் இங்கு இருந்தாலும் நிம்மதியாக இருக்கிறேன்..பணத்திற்காக அலய வில்லை

  ReplyDelete
  Replies
  1. 30000 ஆயிரம்?.... போதுமா.... இன்னும் 40000...50000....வேனுமா.. புதிதாக அரசு பள்ளியில் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர் சம்பளம் PAY-20600 +7828(DA) +300(HRA) = 28728 --2843( CPS பிடித்தம்) ஆக கையில் பெரும் மாத ஊதியம்= 25885 இதில் உமக்கு பேராசை 30000 வேண்டும்....

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி