TET பட்டதாரிகள் சங்கம் - போராட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2023

TET பட்டதாரிகள் சங்கம் - போராட்டம் அறிவிப்பு.




தகுதி தேர்வு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் , TET பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

 ஆசிரியர் மறு நியமன தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறிய ஆசிரியர்கள் , மீண்டும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

16 comments:

  1. போய் படிக்கிற வேலைய பாருங்க

    ReplyDelete
  2. TET என்பது ஆசிரியர் ஆவதற்கு ஒரு தகுதி தேர்வு மட்டுமே. இதே போல் கல்லூரி பேராசிரியர்களுக்கு செட் தேர்வு உண்டு. செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற யாருக்கும் பணி நியமனம் இதுவரை வழங்கவில்லை. செட் போல டெட்டும் தேர்ச்சி தேர்வு மட்டுமே.2012 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு நிறைய ஆசிரியர்கள் வெய்க்டேஜ் மூலமாக அந்த நேரத்தில் தேவைக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்பட்டது. அன்றே நீங்கள் 90 மதிப்பெண் கீழ் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணி வழங்க கூடாது என்று போராடி இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் கடுமையான எதிர்ப்பு அம்மா ஆட்சியில் பண்ணவில்லை. இப்போது வரும் பணி நியமனம் தேர்வில் உங்கள் முழு முயற்ச்சியில் வெற்றி பெறுங்கள். தேவை இல்லாத போராட்டம் உங்கள் நேரத்தை வீணடிக்கும். அரசியல் வாக்கு உறுதிகளை நம்ப வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. பணி நியமன தேர்வில் வெற்றி பெற்று வேலை வாங்கி கொள்ளுங்கள். அது தான் டெட் தேர்வு வெற்றி பெற்ற எல்லாருக்கும் சரியாக இருக்கும். நீங்கள் கூறுவது போல employment சீனியாரிட்டி வைத்து பணி வழங்கியதால் 2013 ஆம் ஆண்டு நிறைய ஆசிரியர்களுக்கு பணி கிடைக்க வில்லை

      Delete
  3. Anyway govt has no idea for postings ,only temporary postings. Exam only drama

    ReplyDelete
  4. Court case continuous and no postings

    ReplyDelete
  5. அனைவருக்கும் பொருந்துமாறு ஒரு முறையை தேர்ந்தெடுப்பதே சரி.நியமனதேர்வு என்பது இதற்கு சரியான தீர்வு இல்லை.2013 ஒரே அறிவிப்பில் வேலையில் சேர்ந்தவர்க்கு ஒரு முறையும்அதனால் பாதிக்க பட்டவர்க்கு இப்போது நியமன தேர்வு என்பது சரியல்ல.

    ReplyDelete
  6. சாதாரண பாமர மக்களிடம் இந்நிலையை கூறினால் கூட இது என்ன நியாயம் என்றே கூறுவார்கள்.10 ஆண்டுகளாக இதற்கு ஒரு தீர்வு கூறாமல் இப்போது நியமன தேர்வு என்றால் சரியா? இது முற்றிலும் தேர்வர்களின் தவறல்ல.ஆட்சியாளர்களின் தவறு.அரசின் தெளிவான கொள்கை முடிவுகளை எடுப்பதில்லை.இதனால் ஆசிரியர் வேலைக்கு ஏன் படித்தோம் என்று ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கும்.ஏன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோம்!!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வேதனை புரிகின்றது ஐயா. நான் ஆசிரியர் அல்ல. 2013 ஆம் ஆண்டு தேவைக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்பட்டது. நீங்கள் தேர்ச்சி பெற்றது தகுதி தேர்வு மட்டும் தான். தேவை ஏற்படும் போது தான் பணி நியமனம் வழங்கப்படும். உங்களை விட weightage அதிகமாக மற்றும் சாதியின் அடிப்படையில் தான் பணி நியமனம் வழங்கப்பட்டது. போட்டியில் முதலில் வருவதற்கு தான் பரிசு கொடுக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் உங்கள்கூட தேர்ச்சி பெற்ற பாதி பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது என்று அதையே தான் பிடித்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் 82 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று கூறும் போது போராட்டம் பண்ணி இருக்க வேண்டும் அல்லது 2013 ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்ட பின்பு தேர்வு நடத்துங்கள் என்று போராட்டம் பண்ணி இருக்க வேண்டும். இரண்டுமே பண்ணாமல் இப்போது போராடுவது அழகு அல்ல. இப்போது இருக்கும் சூழலில் பணி நியமனம் தேர்வு கண்டிப்பாக வைத்து தான் ஆக வேண்டும்

      Delete
  7. சரிங்க ஐயா, 70000 காலிப்பணியிடம் இருக்குங்க. அதை ஏன் நிரப்பாமல் அரசு பள்ளியை ஒழிக்க முன் வருகிறார்கள் இந்த ஆட்சியாளர்கள். ஏன் தேர்தல் அறிக்கையில் பணி தருகிறோம்னு வாக்குருறுதி தரனும்.சரி அப்படியே முடியலதான நாங்கள் தெரியாமல் வாக்குறுதி கொடுத்திட்டோம் உங்களின் ஓட்டுக்காக இதை செய்தோம் எனவே எங்களை நம்ப வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லட்டும்.யாராவது போராட்டம் செய்வாங்கலானு பார்க்கலாம்.

    ReplyDelete
  8. 70000 காலி பணியிடமா இந்தப் புரளியை யார் உங்களிடம் கிளப்பிவிட்டது? நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியர். இவ்வளவு காலி பணியிடம் இல்லை தயவு செய்து நம்ப வேண்டாம்.... ஏற்கனவே பணியில் உள்ளவர்களை உபரி பணியிடம் என்று சொல்கிறார்கள்...

    ReplyDelete
  9. இந்த சொல்லுகிறர்கள் மெல்லுகிறரர்கள் தேவையற்ற பேச்சு வேணாம்.தற்காலிக ஆசிரியர்கள்,கொரானா காலத்தில் சேர்ந்த மாணவர்கள் என்ற அமைச்சர் சொன்ன கணக்குப்படி போட்டுபாருங்கள்.கடந்த பத்து வருடம் ஓய்வு பெற்றோர் கணக்கு எல்லாம் போட்டு பாருங்க துறையில் உள்ள ஆசிரியரே! கணக்கு சரியாக வரும்.

    ReplyDelete
  10. 2013 பேட்ச் நண்பர்களே உடனடியாக நியமனத்தெர்வுக்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் stay வாங்குங்கள். இது தான் நமக்கும் நல்லது, அரசுக்கும் நல்லது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி