சனி இந்த ராசிகளை பிடித்து விட்டார்.. யோகத்தைப் பெறுகின்ற ராசிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2023

சனி இந்த ராசிகளை பிடித்து விட்டார்.. யோகத்தைப் பெறுகின்ற ராசிகள்

 

சனி பகவானால் அற்புதமான நல்ல பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.


நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர். சனி பகவான் சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது தான் சனி பகவானின் வேலை. நன்மைகள் மற்றும் தீமைகள் என அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.


நவகிரகங்களில் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ஏனென்றால் அவர் நீதிமான். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது சனி பகவான் பயணம் செய்து வருகிறார். வக்ரமாக பயணம் செய்து வந்த சனி பகவான் கடந்த நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார்.


இதே போல வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். சனிபகவானின் வக்ர நிவர்த்தி தற்போது நடைபெற்றுள்ளதால் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஆனால் சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது தெரிந்து கொள்வோம்.


ரிஷப ராசி

 

சனிபகவான் உங்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கப் போகின்றார். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் இருந்தாலும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படும். ஆனால் முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சில முடிவுகள் எடுக்கும் போது அதிக ஆலோசனை பெறுவது நல்லது.


மேஷ ராசி

 

சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.


மிதுன ராசி

 

சனிபகவானின் தாக்கம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.


பொறுப்புத் துறப்பு:


இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

1 comment:

  1. விடியல் ஆட்சி இருக்குறவர ஆசிரியர்களுக்கு நல்ல நேரம்தான் 😉😜

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி