டிச.23 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2023

டிச.23 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

 

காரைக்கால்: திருநள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை டிசம்பர் 20 முதல் 23ஆம் தேதி வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் கூட நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


சனி பெயர்ச்சி நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்டம் மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதே போல காரைக்காலில் நாளை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையாக கணக்கிடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி பெயர்ச்சி நிகழ்ந்து ஒரு மாதம் வரைக்கும் திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சனி பெயர்ச்சி எல்லாம் ஒரு பொய் பித்தலாட்டம் வருமானம் பெரும் ஒரு யுக்தி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி