மருத்துவமனை, கல்வி நிலையங்களில் 5 லட்சம் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2023

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் 5 லட்சம் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கு அனுமதி

 ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 6.5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது.மேலும், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யுபிஐ கட்டண வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அந்த வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. 6.5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. 2024ம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


 ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 5வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை.யுபிஐ பரிமாற்றம்சக்திகாந்த தாஸ் மேலும் கூறுகையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அவ்வபோது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக பணப்புழக்கம் கொண்டது மற்றும் அதிக மதிப்பில் பணப்பரிமாற்றம் செய்யும் இடம் என வகைப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இனிமேல், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பரிமாற்றத்தின் அளவு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் ஆக உயர்த்தப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி