இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2023

இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

 

பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தெரிவித்துள்ளார்.


மாணவர்களுக்கு எளிமையாக பாடம் புகட்டும் ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர்" திட்டத்தின் கீழ் கனவு ஆசிரியர் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி தமிழக அரசு கெளரவித்து வருகிறது.


இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் கனவு ஆசிரியர் விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் 379 ஆசிரியர்களுக்கான கனவு ஆசிரியர் விருதை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.


பின்னர் இவ்விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம்" எனத் தெரிவித்தார்.

8 comments:

 1. ஆசிரியையின் அடையாளத்தையே மாற்றியது சரியா?

  ReplyDelete
 2. இதை வண்மையாக கண்டிக்கின்றோம்....

  ReplyDelete
 3. நல்ல தரமான கல்வியை கொடுங்க ஆசிரியர்களை நியமனம் செய்ங்க அடிப்படை தேவைகளை சரி செய்ங்க

  ReplyDelete
 4. இது ரொம்ப அவசியமா? பென்ஷன் தர மாட்டார். இந்த வெட்டி அறிவிப்பு தேவையா? சங்கங்கள் இனியும் ஜால்ரா போட வேண்டாம். வேலை நிறுத்த போராட்டம் அறிவியுங்கள், பழைய பென்ஷன் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை மட்டும் வைத்து வெற்றி பெறலாம். நீங்கள் வேண்டும் என்றே 23 கோரிக்கை வைக்கிறீர்கள், அதில் உதவாத 5 ஐ நிறைவேற்றுகின்றனர். உடனே நீங்கள் போராட்டம் வெற்றி என கூறுகிறீர்கள். உங்களுக்கு மனசாட்சி இல்லையா?

  ReplyDelete
 5. இன்னும் 2.5 ஆண்டுகள் தான் உள்ளது. மகளீர் உரிமை தொகை , இலவச பேருந்து பயணம் தர நிதி இருக்கிறது. நமக்கு பலைய பென்ஷன் தர பணம் இல்லையா?

  ReplyDelete
 6. கல்வித்துறையில் தேவையில்லாத அறிவிப்புக்கு பஞ்சமே இல்லை தேவையான அறிவிப்பு ஒன்னும் இல்லை

  ReplyDelete

 7. ஆசிரியர்கள் ஏமாற்ற படுகிறார்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி