பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு எளிமையாக பாடம் புகட்டும் ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர்" திட்டத்தின் கீழ் கனவு ஆசிரியர் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி தமிழக அரசு கெளரவித்து வருகிறது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் கனவு ஆசிரியர் விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் 379 ஆசிரியர்களுக்கான கனவு ஆசிரியர் விருதை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.
பின்னர் இவ்விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம்" எனத் தெரிவித்தார்.

ஆசிரியையின் அடையாளத்தையே மாற்றியது சரியா?
ReplyDeleteஇதை வண்மையாக கண்டிக்கின்றோம்....
ReplyDeleteநல்ல தரமான கல்வியை கொடுங்க ஆசிரியர்களை நியமனம் செய்ங்க அடிப்படை தேவைகளை சரி செய்ங்க
ReplyDeletePosting pannunka sir
ReplyDeleteஇது ரொம்ப அவசியமா? பென்ஷன் தர மாட்டார். இந்த வெட்டி அறிவிப்பு தேவையா? சங்கங்கள் இனியும் ஜால்ரா போட வேண்டாம். வேலை நிறுத்த போராட்டம் அறிவியுங்கள், பழைய பென்ஷன் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை மட்டும் வைத்து வெற்றி பெறலாம். நீங்கள் வேண்டும் என்றே 23 கோரிக்கை வைக்கிறீர்கள், அதில் உதவாத 5 ஐ நிறைவேற்றுகின்றனர். உடனே நீங்கள் போராட்டம் வெற்றி என கூறுகிறீர்கள். உங்களுக்கு மனசாட்சி இல்லையா?
ReplyDeleteஇன்னும் 2.5 ஆண்டுகள் தான் உள்ளது. மகளீர் உரிமை தொகை , இலவச பேருந்து பயணம் தர நிதி இருக்கிறது. நமக்கு பலைய பென்ஷன் தர பணம் இல்லையா?
ReplyDeleteகல்வித்துறையில் தேவையில்லாத அறிவிப்புக்கு பஞ்சமே இல்லை தேவையான அறிவிப்பு ஒன்னும் இல்லை
ReplyDelete
ReplyDeleteஆசிரியர்கள் ஏமாற்ற படுகிறார்கள்.