30.01.2024 ( செவ்வாய் கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2024

30.01.2024 ( செவ்வாய் கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு 26.012024 முதல் 30.012024 வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு எதிர்வரும் 30.012024 ( செவ்வாய் கிழமை ) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது . மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 - ம் தேதி ( 10.02.2024 ) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , பணி நாளாக அறிவிக்கப்படுகிறது . இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் , இஆப . தெரிவித்துள்ளார் .No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி