BEO - Provisional Selected Candidates List TRB Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2024

BEO - Provisional Selected Candidates List TRB Published

 

2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 33 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை 6T GODT.1 / 2023 , நாள் .05.06.2023 அன்று வெளியிடப்பட்டது . விண்ணப்பதாரர்கள் 12.07.2023 வரை தேர்விற்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 Online மூலம் விண்ணப்பித்தவர்கள் 42,716 பேர் . அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR ( Optical Mark Reader ) வழியில் 10.09.2023 அன்று தேர்வு நடத்தப்பட்டதில் 35,403 பேர் தேர்வு எழுதினார்கள் . விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் , வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 13.07.2023 முதல் 17.07.2023 வரை திருத்தம் செய்ய ( Edit Option ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது. 

வட்டாரக் கல்வி அலுவலருக்கான ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR ( Optical Mark Reader ) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 09.11.2023 அன்று வெளியிடப்பட்டன பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு , அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கு 1 : 1.25 என்ற விகிதாச்சாரப்படி 14.12.2023 ( 50 பணிநாடுநர்கள் ) மற்றும் 04.01.2024 அன்று ( ஒரு பணிநாடுநர் ) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மொத்தம் 51 பணிநாடுனர்கள் அழைக்கப்பட்டனர். 

வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவடைந்து 33 இனச் சுழற்சிகளுக்கான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் ( Provisional Selection List ) விவரத்தினை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 12.01.2024 அன்று வெளியிடப்பட்டது என்ற விவரம் செய்திக் குறிப்பின் வாயிலாக பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

1 comment:

  1. அமுதசுரபி பயிற்சி மையம் - தர்மபுரி
    PG TRB தமிழ் & கல்வியியல்
    New Batch will start soon

    குறிப்பு:
    (மூல நூல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கடினமான விடைக் குறிப்புகள், 11 units 1500 பக்க (materials) 10000 வினா - விடைகள்)

    Best coaching centre in Dharmapuri
    Contact: 9344035171, 9842138560

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி