ஏப் .13 க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2024

ஏப் .13 க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்

 

லோக்சபா தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்.,15ல் துவங்கியது. ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வு பிப்., 15ல் துவங்கி, இந்த மாதம், 13ம் தேதி நிறைவு பெற்றது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் பொதுத்தேர்வு துவங்கியது; ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, பிப்., 21ல் தேர்வு துவங்கியது; இந்த மாதம், 28ல் முடிகிறது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி துவங்கியது. வரும், 22ம் தேதி தேர்வு முடிகிறது. பிளஸ் 1 பொதுதேர்வு மார்ச், 4ல் துவங்கியது. வரும், 25ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்க உள்ளது; ஏப்., 8ல் முடிகிறது.


இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 19ல் ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.


இந்த ஓட்டுப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும், 15ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.


இதன் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசித்து, வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். அதன் விபரம், இன்று அல்லது நாளை பள்ளிக்கல்வியால் வெளியிடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி