தேர்தல் பணிக்கு செல்ல இருக்கும் மதிப்பிற்குரிய அரசூழியர், ஆசிரியர்களே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2024

தேர்தல் பணிக்கு செல்ல இருக்கும் மதிப்பிற்குரிய அரசூழியர், ஆசிரியர்களே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.


 

நீங்கள் செல்லும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அப்பள்ளி ஆசிரியர்கள், அப்பள்ளியின் உட்புற வெளிப்புற சுவரிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் பல வண்ண ஓவியங்களும், பாடத்தொடர்புடைய படைப்புகளும் கற்றல் சார்ந்த ஓவியங்களும் வரையப்பட்டிருக்கும் எழுதப்பட்டிருக்கும்

அவற்றின் மீது வேட்பாளர்களின் சின்னங்களை பசைகொண்டு ஒட்டி அவர்களின் உழைப்பை பாழாக்கி விடாதீர்கள். மாறாக செல்லோடேப் கொண்டோ அல்லது எதுவும் எழுதப்படாத பகுதியில் அதை ஒட்டுங்கள்


ஒருநாள் தானே நமக்கென்ன என்று அந்த உழைப்பில் ஒட்டி அதை சிதைக்க வேண்டாம். ஏனெனில் அதை உருவாக்க அவர்கள் எத்தனை நாள் கஷ்டப்பட்டிருப்பர் என்று அவர்கள் இடத்தில் இருந்து சிந்தித்து அந்த வகுப்பறையை வாக்குச்சாவடியாக மட்டும் பார்க்காமல் அதில் உள்ள உழைப்பை பார்ப்போம்


இதுபோல் இன்று எத்தனையோ பள்ளிகள் வண்ணமயமாக அந்த பள்ளி ஆசிரியர் களால் ஜொலித்துக்கொண்டு இருக்கிறது, அதை சிதைத்துவிடாதீர்கள் இது அனைவரின் அன்பு வேண்டுகோள்.

1 comment:

  1. எங்கு சென்றாலும் நாமும் ஒரு ஆசிரியராக இருப்போம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி